Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவின் சோப்பு குளியல்

தமன்னாவின் சோப்பு குளியல்
, புதன், 1 ஆகஸ்ட் 2012 (19:41 IST)
FILE
ஐஸ்வர்யாராய், கத்‌ரினா கைஃப், காஜல் அகர்வால், அசின் ஆகியோரைத் தொடர்ந்து தமன்னாவும் லக்ஸ் சோப் உபயோகியுங்கள், என் சரும பளபளப்புக்கு அதுவே காரணம் என்று உங்கள் வரவேற்பறை தேடி வந்து சொல்லவிருக்கிறார். ஆம், தமன்னாவையும் இழுத்துப் போட்டிருக்கிறது லக்ஸ் நிறுவனம்.

காஜல் அகர்வாலும், அசினும் ஒன்றாக லக்ஸ் விளம்பரத்தில் தோன்றுவார்கள். தமன்னா கொஞ்சம் ஸ்பெஷல். இவருக்கு தனி விளம்பரம்.

இந்த விளம்பரம் பாங்காக்கில் எடுக்கப்பட்டுள்ளது. உடைகள் மனிஷ் மல்கோத்ரா. தென்னிந்திய அளவில் தமன்னாவுக்கு க்ரேஸ் அதிகம் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள். தமன்னா பயன்படுத்தும் சோப் என்றால் விற்பனை அதிக‌ரிக்கும்தானே.

Share this Story:

Follow Webdunia tamil