Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷை பாரா‌ட்டிய அ‌மிதா‌ப்

Webdunia
செவ்வாய், 20 மே 2014 (16:16 IST)
தற்போது நடிகர் தனுஷ் இந்தி படமொன்றில் நடித்து வருகிறார். ராஞ்சனா படத்துக்குப் பின் இவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. இயக்குனர் பால்கி இயக்கி வருகிறார். பல்வேறு இந்தி நடிகர்கள் இதில் நடித்தாலும், பார்வையற்றவராக மிக முக்கியமான கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். 
தான் வரும் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல நாட்கள் ரிகர்சல் செய்து நடித்து அசத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனுஷின் நடிப்பையும், அதற்காக மெனக்கெடுவதையும் பார்த்து மிகவும் பாராட்டினாராம். 
 
அவர் மட்டுமல்லாமல் மற்ற நடிக, நடிகைகளின் பாராட்டையும் பெற்று வருகிறார். மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பி.சி.ஸ்ரீராம், ஷூட்டிங்கில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனுஷை விதவிதமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்து தள்ளுகிறாராம். அப்படி எடுக்கும் படங்களை பெரிய அளவில் பிரேம் போட்டு தனது வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார் தனுஷ்.  

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments