Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பரில் திரைக்கு வரும் முனி 3 - கங்கா

டிசம்பரில் திரைக்கு வரும் முனி 3 - கங்கா
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:37 IST)
லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் முனி 3 - கங்கா டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 
முனி, முனி 2 - காஞ்சனா படங்களின் வெற்றிக்குப் பிறகு லாரன்ஸ் இயக்கி நடிக்கும் படம்தான் இந்த முனி 3 - கங்கா. தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருந்த லாரன்சுக்கு அவர் கடைசியாக இயக்கிய ரிபெல் படம் பெரும் தோல்வியாக அமைந்தது. தயாரிப்பாளர்கள் கொடுத்த புகார் காரணமாக சில கோடிகள் அவர் நஷ்டஈடு தரவேண்டி வந்தது.
 
அந்த இக்கட்டிலிருந்து அவரது புகழை மீட்டெடுக்க அவர் நம்பியிருப்பது முனி 3 - கங்கா படத்தைதான். நித்யா மேனன், தாப்ஸி, கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் 5 -ஆம் தேதிமுதல் 25 -ஆம் தேதிவரை நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil