Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜேம்ஸ் வசந்தனும் இயக்குனரானார்

ஜேம்ஸ் வசந்தனும் இயக்குனரானார்
, திங்கள், 16 ஜூன் 2014 (19:28 IST)
சின்னத்திரை பிரபலமாக இருந்த ஜேம்ஸ் வசந்தனை தனது சுப்பிரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளராக்கி அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சசிகுமார். அவரின் ஈசன் படத்துக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். வேறுசில படங்களிலும் தனது இசைத் திறமையை காட்டினார்.
 
முதல் படத்தில் கிடைத்த வரவேற்பும், புகழும் அடுத்தடுத்தப் படங்களில் காணாமல் போனது. இந்நிலையில் வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
கல்லூரியை மையப்படுத்திய இந்தப் படத்தை இசை சார்ந்த படமாக அவர் இயக்கி வருகிறார். படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெறுகின்றன. படத்தின் இசையும், பாடல்களும் ஜேம்ஸ் வசந்தன்.
 
புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே புதுமையாக இருக்கும் என ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil