ஜூன் 19 முதல் ரசிக்கும் சீமானே

Webdunia
திங்கள், 8 ஜூன் 2009 (14:00 IST)
ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடித்திருக்கும் ரசிக்கும் சீமானே இம்மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் முதல் முறையாக எதிர்மறை நாயகனாக நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

ஆர்.கே.வித்யாதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் எட்டப்பன். கதையின் நாயகன் அடுத்தவரை ஏமாற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறவன் என்பதால் இந்தப் பெயரை தேர்வு செய்திருந்தனர்.

இதற்கு எட்டப்பனின் வ ா‌ ரிசுகள் எதிர்ப்பு தெ‌ரிவித்ததோடு, வழக்கும் தொடர்ந்தனர். இதன் காரணமாக படத்தின் பெயர் ரசிக்கும் சீமானே என்று மாற்றப்பட்டது.

முதல் முறையாக எதிர்மறை நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார் என்பதுடன் நவ்யா நாயர் கிளாமராக நடித்திருக்கும் படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

நந்தனம் படத்தில் அறிமுகமான நவ்யாநாயர் தமிழ், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி இன்றுவரை அப்படிதான் நடித்தும் வந்திருக்கிறார். விதிவிலக்காக ரசிக்கும் சீமானே படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார்.

வரும் 19 ஆம் தேதி திரையரங்கில் நவ்யாவின் கிளாமர் ரோலை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். ரசிக்கும் சீமானே என்று சும்மா பெயர் வைக்கவில்லை இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

Show comments