Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூன் மாதம் கரைசேரும் வைபவின் கப்பல்

ஜூன் மாதம் கரைசேரும் வைபவின் கப்பல்
, வியாழன், 24 ஏப்ரல் 2014 (13:27 IST)
நடிகர் வைபவ் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்த வேளையில் தனி ஹீரோவாக தொடங்கப்பட்ட படம் கப்பல். ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்த கார்த்திக் கிரிஷ் இயக்கம். கப்பல் குறித்து அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லாததால் கப்பல் தரை தட்டியிருக்கும் என்று அது குறித்து யாரும் கவலைப்படவில்லை.
இந்நிலையில் டமால் டுமீல் படத்தில் வைபவ் தனி ஹீரோவாக நடித்து படமும் வெளிவந்து சுமார் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. டமால் டுமீலை தொடர்ந்து வைபவ் தனி ஹீரோவாக மட்டுமே நடிப்பாரா? பல ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பாரா? தனி ஹீரோ வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்று பல கேள்விகள்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக நல்ல செய்தி ஒன்றை வைபவ் வெளியிட்டுள்ளார். என்றோ தொடங்கப்பட்ட கப்பல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. போஸ்ட்புரொடக்சனை வேகமாக முடித்து ஜூன் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார்களாம்.
 
ஆக, தரைதட்டியதாக கருதப்பட்ட கப்பல் வெற்றிகரமாக ஜூன் மாதம் கரைக்கு திரும்புகிறது.

Share this Story:

Follow Webdunia tamil