Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்தை குறி வைக்கும் சுந்தர் சி-யின் அரண்மனை

Webdunia
செவ்வாய், 13 மே 2014 (16:57 IST)
சுந்தர் சி. இயக்கி நடித்து வரும் அரண்மனை குறித்து எந்த தகவலும் இல்லை. அமானுஷ்ய படத்தின் வேலையையும் அமானுஷ்ய அமைதியுடன் நடத்துகிறாரோ என்று சந்தேகம். இந்நிலையில் சைலண்டாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
ஏற்கனவே சொன்ன மாதிரி இதுவொரு அருந்ததி டைப் கதை. அதாவது அமானுஷ்ய சக்தியை மையப்படுத்தியது. அமானுஷ்ய என்றாலே ஒரு அரண்மனை வேண்டுமே. இந்தப் படத்தின் பெயரே அரண்மனைதான். இந்த அரண்மனைதான் கதை நடக்கும் இடம்.
 

பழங்கால அரண்மனை ஒன்றை அதன் பங்குதாரர்களான சொந்தங்கள் விற்க முயற்சிக்கிறார்கள். அடுத்தவர் கைக்கு அரண்மனை செல்லும்முன் அதில் ஆசைதீர கும்மாளமடிக்கும் எண்ணத்துடன் அரண்மனையில் ஒன்று கூடுகிறார்கள். அதன் பிறகு நடப்பதை சின்ன குழந்தையும் யூகிக்க முடியும் என்பதால் கதையை விட்டுவிடுவோம். ஆனால் பெரிய ஆள்களும் பதறும்வகையில் திகிலை கொட்டி எடுத்திருக்கிறாராம் சுந்தர் சி.
இந்தப் படத்தின் ஸ்டில்லில் சுந்தர் சி-யுடன் ஹன்சிகாவும் இடம்பெற்றிருந்தார். அதனால் அனைவருக்கும் பொறாமை கலந்த ஒரு சந்தேகம். படத்தில் ஹன்சிகா சுந்தர் சி-யின் ஜோடியா? இதற்கு ஹன்சிகாவே நோ என்ற பதிலைத் தந்து பால் வார்த்துள்ளார்.
 
இவர்கள் தவிர ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் ஜூன் மாதமே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Show comments