Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜில்லா, வீரத்தை பின்னுக்கு தள்ளிய மான் கராத்தே ஓபனிங்

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2014 (18:22 IST)
விஜய், அஜீத்துக்கு இது அலார்ட் அலாரமாக இருக்கும். பலமான ரசிகர் வட்டத்தைக் கொண்ட இவர்களின் திருவிழா வெளியீடான ஜில்லா, வீரத்தைவிட சிவ கார்த்திகேயனின் மான் கராத்தே சென்னை மாநகரில் அதிக ஓபனிங்கை பெற்றுள்ளது. 
சிவ கார்த்திகேயனின் வளர்ச்சியைப் பார்த்து திரையுலகம் மிரண்டு போயுள்ளது. அஜீத், விஜய்க்குப் பிறகு சிவ கார்த்திகேயன்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை அதிர வைத்துள்ளது மான் கராத்தேயின் ஓபனிங்.
 

சென்னை மாநகரில் ஜில்லா முதல் மூன்று தினங்களில் 1.32 கோடியை வசூலித்தது. வீரம் 1.23 கோடி. மான் கராத்தேயின் மூன்று நாள் வசூல் இவையிரண்டையும் விட அதிகம். 1.41 கோடி.
இந்த புள்ளி விவரம் உண்மையாகவே விஜய், அஜீத் ரசிகர்களையும், திரையுலகையும் அதிர வைத்துள்ளது. அஜீத், விஜய்க்குப் பிறகு சிவ கார்த்திகேயன்தான் என்பதை சிவ கார்த்திக்கேயனுக்கு பிறகு விஜய், அஜீத் என சரித்திரத்தை மாற்றி எழுதியுள்ளது மான் கராத்தே.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments