Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜித்தன் 2 நாயகியான இனியா

ஜித்தன் 2 நாயகியான இனியா
, திங்கள், 21 ஜூலை 2014 (18:35 IST)
அழகு இருக்கிறது, நன்றாக நடிக்கவும் வருகிறது. ஆனால் துண்டு துக்கடா வேடத்துக்குதான் இனியாவை பயன்படுத்துகிறது தமிழ் சினிமா. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் துண்டு துக்கடா கூட இல்லை. ஒரேயொரு குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் இனியா.
இனி இனியா நாயகியாக நடிப்பது கனவில்தான் சாத்தியமாகும் என்ற நிலையில் அந்த இனிய கனவு அவருக்கு நனவாகியிருக்கிறது. எஸ், மீண்டும் நாயகியாகிறார் இனியா.
 
ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் தனது பெயர் சொல்லும் ஒரே படமான ஜித்தனின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். காமெடி ஹாரர் வகைமையில் தயாராகும் இந்தப் படத்தில் இனியாதான் ஹீரோயின். ஸ்ருதி என்ற புதுமுகம் இரண்டாவது நாயகி.
 
ஜித்தன் படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வாதான் ஜித்தன் 2-க்கும் கதை எழுதியுள்ளார். ஜித்தன் ரமேஷைப் போலவே இந்தப் படம்தான் இனியாவின் இப்போதைய நம்பிக்கை நட்சத்திரம்.

Share this Story:

Follow Webdunia tamil