Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிகிர்தண்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிகிர்தண்டா ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 30 ஏப்ரல் 2014 (18:41 IST)
அதிகம் எதிர்பார்க்கப்படும் கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டாவின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பாராஜ் முதலில் எழுதிய ஸ்கிரிப்ட் ஜிகிர்தண்டா. ஜிகிர்தண்டா கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம், என்னுடைய பட்ஜெட் ஒருகோடிக்குள் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் சொன்னதால் அதன் பிறகு அவர் எழுதிய ஸ்கிரிப்ட்தான் பீட்சா. 
 
ஜிகிர்தண்டா மதுரை பின்னணியில் நடக்கும் படம். சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். இவர்கள் தவிர கருணாகரன், சிம்ஹா போன்றவர்களும் படத்தில் இருக்கிறhர்கள்.
 
பீட்சாவைவிட ஊகிக்க முடியாத திரைக்கதை கொண்ட படம் என்பதால் ஜிகிர்தண்டாவுக்கு திரையுலகிலும் எதிர்பார்ப்பு.
 
மே 23 படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil