Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சௌந்தர்யா அஸ்வினுக்கு கிடைத்த இரட்டைப் பதவி

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2014 (12:28 IST)
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஈராஸ் இன்டர்நேஷனல். இந்த நிறுவனம்தான் சௌந்தர்யா அஸ்வின் இயக்கிய கோச்சடையான் படத்தை தயாரித்தது.
கோச்சடையான் சரியாகப் போகவில்லை என்றாலும் சௌந்தர்யாவின் தொழில்நுட்ப திறன்மீது அந்த நிறுவனத்துக்கு மரியாதை ஏற்பட்டிருக்கிறது போலும். ஈராஸின் தலைமை நிர்வாகத்தில் சௌந்தர்யாவுக்கு இடமளித்துள்ளனர்.
 
ஈராஸின் கிரியேடிவ் இயக்குனர் மற்றும் ஈராஸ்நவ் டிஜிட்டலின் தலைமைப் பொறுப்பு ஆகிய இரு பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈராஸ் நவ்வின் கீழ்தான் ஈராஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் துறை, டிடிஎச், ஐபிடிவி, மொபைல் என அனைத்தும் வருகின்றன.
 
இந்த பொறுப்புகளை வகித்துக் கொண்டே தனது இயக்குனர் பணியையும் தொடரப் போவதாக சௌந்தர்யா அஸ்வின் கூறியுள்ளார். தற்போது ஈராஸ் தயாரிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை எழுதும் பொறுப்பை அவர் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

Show comments