Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைவம் படத்தை வெளியிட இடைக்கால தடை

சைவம் படத்தை வெளியிட இடைக்கால தடை
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (10:21 IST)
விஜய் இயக்கியிருக்கும் சைவம் படத்தை வரும் 17ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் தடைக்கு பின்னாலிருப்பது விஜய் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் கடன். கடன் தந்தது எஸ்.ஜி.ஃபிலிம் ராமதாஸ். அவர்கள்தான் வழக்கு தொடுத்து படத்துக்கு தடை வாங்கியுள்ளனர்.
 
அவர்களின் புகார் வருமாறு:
 
இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு எங்கள் நிறுவனம் ரூ.1.5 கோடி நிதி வழங்கி உள்ளது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து விஜ‌ய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார்.
 
படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு பணத்தைத் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர்.
 
ஆனால், இசை வெளியீட்டு விழா முடிந்தும் எங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. தற்போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை வெளியிட்டால் எங்களது பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். எனவே, எங்களுக்கு பணம் தரும் வரை சைவம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சைவத்தை வரும் 17ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil