Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்.18 கத்தி பாடல்கள் வெளியீட்டு விழா - வரிந்துகட்டும் போராட்டக்காரர்கள்

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (15:40 IST)
கத்தி படத்தின் பாடல்களை லண்டனில் பிரமாண்ட கலை நிகழ்ச்சியுடன் வெளியிடுவதாக இருந்தனர். இந்நிலையில் நாளுக்குநாள் படத்துக்கு எதிர்ப்பு வலுக்க, சென்னையிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.
விஜய்யின் படங்கள் தொடர்ந்து பிரச்சனைக்குள்ளாகி வருகின்றன. கத்திக்கு அதன் தயாரிப்பாளர் லைக்காவினால் பிரச்சனை. படத்தை வெளியிட விடமாட்டோம் என மாணவர் அமைப்புகளும் தமிழ் தேசியவாதிகளும் முண்டா தட்டுகின்றனர்.
 
இந்நிலையில் செப்டம்பர் 18 லீலா பேலஸில் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். அனிருத் கத்திக்கு இசையமைத்துள்ளார்.
 
புலிப்பார்வை பாடல்கள் வெளியீட்டு விழாவில் மாணவர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டது போல் கத்தி ஆடியோ விழாவிலும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். அசம்பாவிதம் நடக்குமா, அடிதடியில் முடியுமா என்பதெல்லாம் போலீஸ் தரும் பாதுகாப்பில் இருக்கிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments