Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்.13 டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் காக்கா முட்டை

செப்.13 டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் காக்கா முட்டை
, செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (17:48 IST)
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும், தனுஷின் வுண்டர்பாரும் இணைந்து தயாரித்துள்ள படம், காக்கா முட்டை. வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வடசென்னை சேரி வாழ் சிறுவர்கள் தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்படும் பீட்சா கடையிலிருந்து பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
 
இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. டொரண்டோ திரைப்பட விழாவில் வரும் 13 -ஆம் தேதி இப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கௌரவம். 
 
மணிகண்டனுக்கு நமது வாழ்த்துகள்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil