Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபீஸ்: கலக்கும் என்றேன்றும் புன்னகை!

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (13:46 IST)
5. விழா
FILE

சென்ற வாரம் வெளியான இப்படம் விளம்பரங்களின் மூலம் மக்களிடையே ஓரளவு சென்றடைந்ததால் முதல் மூன்று தினங்களில் 6.5 லட்சங்களை வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் வாய் வழி விமர்சனம் படத்தை காப்பாற்றினால்தான் உண்டு.

4. மதயானைக்கூட்டம்
FILE

அறிமுக இயக்குனரின் மதயானைக்கூட்டம் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினத்தில் வெளியானது. வார இறுதி மூன்று தினங்களில் 14.4 லட்சங்களை வசூலித்த படம் முதல் ஐந்து தினங்களில் 22.3 லட்சங்களை வசூலித்துள்ளது.

3. இவன் வேற மாதிரி
FILE

கமர்ஷியல் ஹிட் என்று கொண்டாடப்பட்ட இவன் வேற மாதிரி புதிய படங்களின் வரவால் வசூலை கணிசமாக இழந்துள்ளது. வார இறுதியில் 16.05 லட்சங்களையும், வார நாட்களில் 27.2 லட்சங்களையும் வசூலித்த படம் இதுவரை சென்னையில் வசூல் செய்திருப்பது 3.7 கோடிகள்.

2. பிரியாணி
FILE

பிரியாணிக்கு டிமாண்ட் இருக்கிறது. வார இறுதியில் 98 லட்சங்களை பிரியாணி வசூலித்துள்ளது. வார நாட்களில் 1.06 கோடி. இதுவரை 3.2 கோடிகளை படம் வசூலித்துள்ளது.

1. என்றென்றும் புன்னகை
FILE

ரொமாண்டிக் காமெடிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்திருக்கும் படம். வார நாட்களில் 1.24 கோடியும், வார இறுதியில் 1.3 கோடியும் வசூலித்து 3.7 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பது, படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் புன்னகைக்க வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments