Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அட்டகாச ஆரம்பம்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - அட்டகாச ஆரம்பம்
, செவ்வாய், 12 நவம்பர் 2013 (08:22 IST)
சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஆக்டிவ் சைடில் தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களே உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு படம்கூட வெளியாகவில்லை. இந்த வருடத்தில் புதிய ரிலீஸ் இல்லாத முதல் வெள்ளிக்கிழமை.

இந்த வாரமும் ஆரம்பமே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த அழகுராஜாவை பாண்டிய நாடு கீழிறக்கியுள்ளது.

3. அழகுராஜா
FILE

அட்டர் பிளாப் என்பதை பதிவு செய்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 67.7 லட்சங்களை வசூலித்தது. வார நாட்களில் வசூல் 1.09 கோடி. இதுவரை 2.9 கோடிகளை வசூலித்துள்ளது.

2. பாண்டிய நாடு
webdunia
FILE

படத்துக்கு கிடைத்திருக்கும் பாஸிடிவ் விமர்சனத்தால் படம் பிக்கப்பாகியுள்ளது. வார நாட்களில் 63.2 லட்சங்களை மட்டுமே வசூலித்த படம் வார இறுதியில் அழகுராஜாவின் வீக் எண்ட் வசூலை முந்தியது. அதாவது இதன் சென்ற வார இறுதி வசூல் 88.5 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.9 கோடியை வசூலித்துள்ளது.

1. ஆரம்பம்
webdunia
FILE

தொடர்ந்து அதே அட்டகாசமான முதலிடத்தில். வார நாட்களில் 2.06 கோடிகளையும், வார இறுதியில் 1.71 கோடியையும் வசூலித்து இன்னும் பக்கா ஸ்டெடியாகவே உள்ளது. இதுவரை சென்னை வசூல் மட்டும் (11 தினங்களில்) 8.17 கோடிகள்.

இந்த வருடம் இதுவரை வெளியான அனைத்துப் படங்களின் Nலையும் ஆரம்பம் முடியடிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil