Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா

சென்னையில் நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா
, வியாழன், 1 மே 2014 (17:42 IST)
இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் நாகிரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம்.சரவணன் கலந்து கொள்கிறார். சிறப்புரையாற்றுவது நடிகர் சிவகுமார். கௌரவ விருந்தினர்கள் கே.ஆர்.விஜயா, பி.வாசு.
 
2013-ன் சிறந்த குடும்ப பொழுதுபோக்கு தமிழ் திரைப்படமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வாகியுள்ளது. சிவ கார்த்திகேயனை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய முக்கியமான படம் இது. வேலை வெட்டியில்லாத, தினமும் யாருக்காவது காதல் கடிதம் தரும்,  டீச்சருக்கு மாணவியிடம் காதல் கடிதம் தந்துவிடும் கதாபாத்திரத்தை சிவ கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தார். இந்தப் படத்தை சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக தேர்வு செய்து அதன் தயாரிப்பாளர் மதனுக்கு இன்று மாலை நடக்கும் விழாவில் விருது அளிக்க இருக்கிறார்கள்.
 
விழாவில் லஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil