Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூது கவ்வும் ரீமேக் - விஜய் சேதுபதி வேடத்தில் ராஜசேகர்

சூது கவ்வும் ரீமேக் - விஜய் சேதுபதி வேடத்தில் ராஜசேகர்
, புதன், 30 ஏப்ரல் 2014 (19:33 IST)
சூது கவ்வும் படம் தெலுங்கில் Gaddam Gang என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் விஜய் சேதுபதி நடித்த கிட்நாப்பர் கதாபாத்திரத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்க உள்ளார்.
 
சூது கவ்வும் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராஜசேகரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜீவிதா வாங்கியிருந்தார். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளது. அறிமுக இயக்குனர் பி.சந்தோஷ் இந்த ரீமேக்கை இயக்குகிறார். விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் ஜீவிதாவின் கணவரும் நடிகருமான டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு முடிவடையும் நிலையில் உள்ளது.
 
படம் குறித்து பேசிய ராஜசேகர், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில மாறுதல்கள் செய்திருக்கதாக கூறினார்.
 
சூது கவ்வும் இந்தி ரீமேக்கும் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil