Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுறா இயக்குனரின் பட்டைய கிளப்பணும் பாண்டியா

சுறா இயக்குனரின் பட்டைய கிளப்பணும் பாண்டியா
, புதன், 30 ஜூலை 2014 (11:22 IST)
அது என்ன ராசியோ தெரியவில்லை. விஜய் படத்தை யார் இயக்கினாலும் அவர்களுக்கு அடுத்தப் படம் கிடைப்பது குதிரை கொம்பாகிவிடும். தலைகீழாக நின்று தவம் செய்துதான் அடுத்த வாய்ப்பை பெற முடிகிறது.
அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் பல வருட போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில்தான் அதிதி என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமாருக்கும் பல வருடங்கள் போராட வேண்டி வந்தது. அதன் பிறகு கிடைத்த படம்தான், பட்டைய கிளப்பணும் பாண்டியா.
 
விதார்த், மனிஷா யாதவ் நடித்துள்ள இப்படம் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளனர். 
 
எஸ்.பி.ராஜ்குமார் சுறாவுக்கு முன்னால் சில படங்கள் இயக்கியுள்ளார். நகைச்சுவை காட்சிகள் வைப்பதில் வல்லவர். பட்டைய கிளப்பணும் பாண்டியாவையும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்துள்ளார். பழனி - பாப்பம்பட்டி இடையே ஓடுகிற மினி பஸ்தான் படத்தின் மையம். அந்த மினி பஸ்ஸின் டிரைவர் விதார்த், கண்டக்டர் சூரி. பஸ் முதலாளியாக இமான் அண்ணாச்சி. இவர்கள் தவிர இளவரசு, கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் அருள்தேவ் இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. 
 
இந்தமுறையாவது சுறா இயக்குனர் கரையோறுவாரா?
 

Share this Story:

Follow Webdunia tamil