Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசீந்திரன் படத்தில் வைரமுத்துவும் மகன்களும்

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:55 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்து வரும் ஜீவா படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். முன்பு இமான் படம் என்றால் பாடலாசிரியர் யுகபாரதி கண்டிப்பாக இருப்பார். இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இன்னும் தீரவில்லை போலிருக்கிறது. டி.இமானின் சமீபத்திய படங்களில் யுகபாரதி இல்லை.
ஜீவா படத்தில் உள்ள ஆறு பாடல்களில் நான்கை வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி எழுதியுள்ளார். மீதி உள்ள இரு பாடல்களில் ஒன்றை வைரமுத்துவின் இன்னொரு மகன் கபிலனும், ஒரு பாடலை வைரமுத்துவும் எழுதியுள்ளனர். முழுமையான குடும்பப் பாடல் என்றால் இதுதான்.
 
பொதுவாக தான் பாடல் எழுதும் படங்களில் வேறு யாரும் பாடல் எழுதாமல் பார்த்துக் கொள்வார் வைரமுத்து. அனைத்துப் பாடல்களையும் எழுதும் போதுதான் கதையின் மூடுக்கேற்ப எழுத முடியும் என்பது அவரது வாதம். ஜீவா படத்தில் வைரமுத்து அப்படி எதுவும் டிமாண்ட் செய்யவில்லை. உடன் எழுதியது மகன்கள் அல்லவா.
 
கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாராகியுள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.
 

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

Show comments