Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுசீந்திரனின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்

சுசீந்திரனின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்
, வியாழன், 18 செப்டம்பர் 2014 (18:27 IST)
சுசீந்திரன் எழுதி இயக்கியிருக்கும் ஜீவா படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் ஜீவா. அவரது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு ஹீரோ. ஸ்ரீதிவ்யா ஹீரோயின். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தை த நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் மற்றும் ஆர்யாவின் த ஷோ பீப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. ஆர்யாவும், விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும் இணைந்து படத்தை வெளியிடுகின்றன.
 
செப்டம்பர் 26 வெளியாக இருக்கும் இப்படம் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் குழந்தைகளும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழ் வழங்கினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil