Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவலில் ஐஸ்வர்யா

Webdunia
சனி, 26 ஏப்ரல் 2014 (17:28 IST)
சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு ஜோடியாக ஐஸ்வர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இடம் பொருள் ஏவலில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷா யாதவும், விஷ்ணு ஜோடியாக நந்திதாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சில தினங்களிலேயே சீனு ராமசாமியின் நடவடிக்கையில் அதிருப்தியுற்ற மனிஷா யாதவ் படத்திலிருந்து விலகினார். 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த சீனு ராமசாமி...

மனிஷாவுக்கு மேக்கப் போட்டும் கிராமத்து பெண் தோற்றம் வரவில்லை என்று சல்ஜாப்பு சொன்னார். விஜய் சேதுபதி ஜோடியாக நந்திதா நடிப்பது என முடிவானது.

விஷ்ணு ஜோடி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது ஐஸ்வர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இடம் பொருள் ஏவலுக்கு யுவன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏற்கனவே படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments