Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்திக் - இப்போதைக்கு இந்தி இல்லை

சித்திக் - இப்போதைக்கு இந்தி இல்லை
, செவ்வாய், 26 ஜூன் 2012 (16:40 IST)
பாடிகாட் தமிழிலும், இந்தியிலும் சூப்பர்ஹிட்டாகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் சித்திக். அதுவும் இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்குவோம் என்று கருதியிருக்க வாய்ப்பேயில்லை. அடுத்தும் இந்திப் படத்தை இயக்க வேண்டும் என்று அங்கேயே டேரா போட்டிருந்தார். சல்மான்தான் சித்திக்கின் சாய்ஸ். ஆனால் கிடைத்தது ஜான் ஆபிரஹாம்.

அவரும் வேறு படங்களில் பிஸியானதால் இப்போதைக்கு சித்திக்கின் இயக்கத்தில் நடிக்க முடியாத நிலை. குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரையாவது காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் மலையாளத்தில் ஒரு படம் இயக்க தீர்மானித்துள்ளார். படத்தின் பெயர் லேடீஸ் அண்டு ஜென்டில்மேன். ஹீரோவாக மோகன்லால் நடிக்கிறார்.

மோகன்லாலுக்கும் நான்கு பெண்களுக்கும் நடுவில் உள்ள உறவுதான் கதை. இந்திக்கு ஏற்ற கதை என்பதால் இதையும் சித்திக் ‌ரீமேக் செய்வார் என்று நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil