Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கம் இல்லாத காடா... தல, தளபதி இல்லாத நாடா...

சிங்கம் இல்லாத காடா... தல, தளபதி இல்லாத நாடா...
, புதன், 30 அக்டோபர் 2013 (15:21 IST)
சிங்கிளாக நின்றால் சிங்கத்தையும் தமிழக அரசியல் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை விஜய் ரசிகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். இதுவரை பரம வைரியாக இருந்த அ‌ஜீத்தையே தோழன் என்று தோளில் கைபோடும் அளவுக்கு தலைவா ட்‌‌ரீட்மெண்ட் அவர்களை மாற்றியிருக்கிறது.
FILE

மதுரையில் யாருடா தல என்று போஸ்டர் ஒட்டிய அதே விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்துக்காக தங்களின் ஸ்டைலை மாற்றியிருக்கிறார்கள்.

அ‌ஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடும் போட்டோவுடன் சிங்கம் இல்லாத காடா... தல, தளபதி இல்லாத நாடா என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்து நகர் முழுக்க ஒட்டியுள்ளனர்.
webdunia
FILE

இந்த திடீர் பாசமழையில் சிக்குண்ட அ‌‌ஜீத் ரசிகர்கள் தளபதி ரசிகர்களுக்கு நன்றி தெ‌ரிவித்துள்ளனர். ‌ஜில்லா வெளியாகும் போது நாங்களும் உங்களுக்கு போஸ்டர் அடிப்போம் என பு‌ரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது.

மற்ற மாவட்ட ரசிகர்களும் இதனை பின் பற்றலாமே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil