Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரித்திரம் படைக்கும் சந்தியா படம்

சரித்திரம் படைக்கும் சந்தியா படம்
, வியாழன், 30 ஏப்ரல் 2009 (13:12 IST)
சரித்திரம் என்றால் இது சோக சரித்திரம். ஒருமுறை எடுக்கிற படத்துக்கு ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிப்பதுதான் அழகு. ஆனால் சந்தியா நடித்திருக்கும் மஞ்சள் வெயில் படத்துக்கு …?

படம் முடிந்த பிறகு இதுவரை அரை டஜன் ரிலீஸ் தேதிகள் அறிவித்துவிட்டார்கள். ஆனாலும், படம் இன்னும் வெள்ளித் திரைக்கு வரவில்லை. சந்தியா, பிரசன்னா, பாலா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹாசினி சினிமாஸ் தயாரித்திருக்கிறது. படத்தை வெளியிடுகிறவர்கள் சான்ட்ரா நிறுவனத்தினர்.

பல ரிலீஸ் தேதிகளைக் கண்ட இந்தப் படத்துக்கு இறுதியாகவும் உறுதியாகவும் மே ஒன்றை டெட் லைனாக குறித்தார்கள். அன்று மஞ்சள் வெயில் திரைக்கு வரும் என்றார்கள் நம்பிக்கையுடன். இந்தமுறையும் பொய்த்திருக்கிறது நம்பிக்கை.

மே ஒன்று வெளியாகும் நியூட்டனின் 3 ஆம் விதி, பசங்க, மெய்ப்பொருள் படங்களின் பட்டியலில் மஞ்சள் வெயில் இல்லை. அப்புறம் எப்போதுதான் ரிலீஸ்?

சளைக்காமல் இன்னொரு தேதி தந்திருக்கிறார்கள், மே எட்டு. அன்றும் வெளியாகாவிட்டால்? அட போங்க சார், அடுத்த வருடம் மே எட்டு வராமலா போகும்!

Share this Story:

Follow Webdunia tamil