சரண்யா, சம்பத் நடிக்கும் அம்மா அம்மம்மா

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2013 (15:19 IST)
FILE
சீ‌ரியஸாக டைட்டில் வைக்கிறார்களா இல்லை கிண்டலடிக்கிறார்களா? இப்போது வருகிற படங்களின் டைட்டிலை பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. சரண்யா, சம்பத் நடிக்கும் புதிய படத்தின் பெயர், அம்மா அம்மம்மா. சரண்யாவுக்குப் பதில் ஷகிலாவின் படத்தைப் போட்டால் அம்மா அம்மம்மாவின் அர்த்தமே மாறிப் போகும்.

படத்தின் பெய‌ரிலேயே தெ‌ரிந்து விடுகிறது, சரண்யா இதிலும் அம்மாவாக நடிக்கிறார் என்பது. கொஞ்சம் இளமையான அம்மா.

சரண்யா, சம்பத் தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் வெளியூ‌ர் செல்கையில் ஆனந்த், தேவதர்ஷினி தம்பதியுடன் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினி பிரசவத்தின் போது இறந்துவிடுகிறார். அவ‌ரின் குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள் சரண்யா, சம்பத் தம்பதி. எதிர்பாராமல் அந்தக் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள் சிலர். அவர்களிடமிருந்து எப்படி போராடி குழந்தையை சரண்யா மீட்டார் என்பது கதை.

பாலு மணிவண்ணன் அம்மா அம்மம்மாவை இயக்குகிறார். இன்னொரு, என் பொம்முகுட்டி அம்மாவை எதிர்பார்க்கலாமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

Show comments