Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பந்தியாக ஆசைப்பட்ட ரஜினியின் நண்பர்

சம்பந்தியாக ஆசைப்பட்ட ரஜினியின் நண்பர்
, செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:37 IST)
ரஜினியின் சம்பந்தியாக ஆசைப்பட்டதாக ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபு கூறியுள்ளார்.
ரஜினி, மோகன்பாபு நட்பு நாடறிந்தது. இருவரும் வாடா போடா நண்பர்கள். ஹைதராபாத்தில் நடந்த கோச்சடையானின் தெலுங்குப் பதிப்பு விக்கிரமசிம்ஹா படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை முன்னின்று நடத்தித் தந்ததும் மோகன்பாபுதான்.
 
அப்போது பேசிய அவர், எனது இரு மகன்களில் யாராவது ஒருவரை ரஜினியின் மகள்களில் ஒருவருக்கு மணமுடிக்க விரும்பியதாக தெரிவித்தார். தனது இந்த ஆசை லதா ரஜினிகாந்துக்கு தெரியும் என்றும், ஆனால் அது நடக்கவில்லை, அதனால்தான் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள் என்று கூறினார்.
 
மோகன்பாபுவுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil