Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரங்க வேட்டை ட்ரெய்லர் - மனோபாலாவை பாராட்டிய ரஜினி

சதுரங்க வேட்டை ட்ரெய்லர் - மனோபாலாவை பாராட்டிய ரஜினி
, செவ்வாய், 8 ஜூலை 2014 (17:24 IST)
இந்த மாதம் வெளியாகப் போகும் படங்களில் சதுரங்க வேட்டை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடமும், திரையுலகினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 
சதுரங்க வேட்டையை வினோத் இயக்கியுள்ளார். நடித்திருப்பது நட்டு என்கிற நட்ராஜ். இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் கேமராக்காரர் இவர். நடிப்பு ஆசை துளிர்விடும் போதெல்லாம் தமிழில் ஒரு படம் செய்வார். அப்படி நடித்திருக்கும் படம்தான் சதுரங்க வேட்டை. தயாரிப்பு நடிகர் மனோபாலா.
பாரதிராஜாவின் அசிஸ்டெண்டாக சினிமாவில் நுழைந்து இயக்குனரான மனோபாலா ரஜினியை வைத்தும் ஒரு படத்தை இயக்கினார். ஊர்காவலன். பிறகு நடிப்புக்கு வந்து முழுநேர காமெடி நடிகராகிவிட்டார். அவர் தயாரிப்பாளராகி எடுத்த படம்தான் சதுரங்க வேட்டை.
 
படத்தைப் பார்த்த திருப்பதி பிரதர்ஸ் உடனடியாக படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கினர். ஜெயிக்கிற குதிரைகளில் மட்டுமே பணம் கட்டுகிறவர்கள் சதுரங்க வேட்டையை வாங்கியதும் அதன் சந்தை மதிப்பு அதிகரித்தது. ட்ரெயலர் வெளியான பிறகு படம் மீது ரசிகர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ட்ரெய்லரை ரஜினியும் பார்த்துள்ளார். அவருக்கு ட்ரெய்லர் பிடித்துள்ளது. உடனடியாக போன் செய்து மனோபாலாவை பாராட்டியிருக்கிறார்.
 
தனது ட்விட்டர் செய்தியில் இதனை மனோபாலா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மாதம் 25ஆம் தேதி சதுரங்க வேட்டை திரைக்கு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil