Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் படம் - அஜீத், அனுஷ்காவுடன் இணைந்த த்ரிஷா

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (19:02 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் த்ரிஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
கௌதம் படம் இயக்கும் போதெல்லாம் முதல் சாய்ஸாக இருப்பவர் த்ரிஷா. கௌதம் - சூர்யா புராஜெக்ட் நின்று போனதற்கு கௌதம் த்ரிஷாவை நடிக்க வைக்க விரும்பியதும் ஒரு காரணம் என்று அப்போது கூறப்பட்டது. அஜீத் படத்திலும் அவர்தான் நாயகி என்று கூறப்பட்டது. பிறகு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்தனர்.
 
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் போதும் பிடித்த நடிகர் யார் என்றால் தயங்காமல் அஜீத்தின் பெயரை சொல்கிறவர் த்ரிஷா. சமீபத்தில்கூட பிடித்த நடிகர் என்று அவர் பெயரைதான் கூறினார். இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க இதுவும் ஒரு காரணம்.
 
சக்திமிக்க திறமைமிக்க டீமுடன் திருப்திகரமாக தல 55 ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது என்று இதுபற்றி ட்வீட் செய்துள்ளார் த்ரிஷா.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க டான் மெக்கார்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சத்ய சாய் படத்தை தயாரிக்கிறது.
 

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

Show comments