Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவிலில் காதல்

கோவிலில் காதல்
, செவ்வாய், 9 மார்ச் 2010 (19:55 IST)
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம் சிங்கமுகம். பிரான்ஸ் பிக்சர்ஸ் சார்பாக அயீஷா பர்வீன், அலெக்ஸ், ஆறுமுகம் ஆகியோர் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.

கோயிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழும் ஏழை இளைஞனுக்கும், கடவுளை வெறுக்கும் பெண்ணுக்குமான காதல் கதைதான் இந்த சிங்கமுகம்.

காதல், கொலை, காமெடி, சண்டை என கலந்து ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் எம்.பி. இஸ்மாயில். இதில் ஹன·பா தீபன், டிம்பிள் ரோஸ், ராஜ்கான், ஹரிசங்கர், சுடலையாண்டி, கமால் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு ஹியாம், இசை ஆழ்வார்ஸ்ரீ, இப்படத்தின் மொத்தப் பாடல்களையும் கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil