Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பாலிவுட் நடிகர் கோவிந்தா.. என்ன ஆச்சு?

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:35 IST)
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா என்பவர் தன்னை தானே சுட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த கோவிந்தா, தனது சொந்த துப்பாக்கியால் எதிர்பாராத விதமாக அதிகாலை தனது காலில் சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 90களில் பிரபலமாக அறியப்பட்ட பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடித்தவர். 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கோவிந்தா உடற்பயிற்சி செய்ய தயாராகிய நிலையில், துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக சுட்டுக் கொண்டதில், அவரது காலில் குண்டு பாய்ந்து தாக்கியுள்ளது. இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தற்போது கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தோட்டா அகற்றப்பட்டதால் அவரது உடல் நிலைக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments