Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோச்சடையான் சிறப்புக் காட்சியை பார்க்கிறார் மோடி

கோச்சடையான் சிறப்புக் காட்சியை பார்க்கிறார் மோடி
, செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:36 IST)
நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் தேநீர் அருந்த கடந்த 13 -ம் தேதி வந்தார் மோடி. அந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த லதா ரஜினிகாந்த், மோடி எங்கள் வீட்டிற்கு வந்ததன் மூலம் எங்கள் குடும்ப உறுப்பினராகிவிட்டார் என்று கூறினார்.
அப்படி ரஜினிகாந்தின் குடும்பத்தில் ஒருவராகிவிட்ட மோடி கோச்சடையான் சிறப்புக் காட்சியை பார்க்க உள்ளார்.

மே 9 கோச்சடையான் வெளியாகிறது. அதற்கு ஒருநாள் முன்பு மும்பை திரைநட்சத்திரங்களுக்கு கோச்சடையான் படத்தை ஸ்பெஷலாக திரையிட்டு காட்ட ஈரோஸ் இண்டர்நேஷனல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சிறப்பு திரையிடலில் மோடியும் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
webdunia
தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாக ஒருவேளை சிறப்புக் காட்சியில் படத்தை பார்க்க முடியாமல் போனால் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் படத்தை மோடிக்காக திரையிட்டு காட்டவும் கோச்சடையான் தரப்பு தயாராக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil