Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொம்பனில் கார்த்தியுடன் இணையும் ராஜ்கிரண்

கொம்பனில் கார்த்தியுடன் இணையும் ராஜ்கிரண்
, வெள்ளி, 13 ஜூன் 2014 (17:03 IST)
கார்த்தி நடிக்கும் புதிய படம் கொம்பனில் ராஜ்கிரண் முக்கிய வேடமேற்கிறார்.

சகுனி, அழகுராஜா, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தோல்வியால் வதவதவென படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் கார்த்தி.

நாம் நடிப்பதுதான் நடிப்பு, நாம் சொல்வதுதான் கதை என்ற அசட்டையான போக்குக்கு மூன்று தொடர் தோல்விகள் தேவைப்பட்டிருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் கதை கேட்டு நிதானமாக அவர் நடித்து வரும் ஒரே படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் மெட்ராஸுக்கு முதலில் காளி என்றுதான் பெயர் வைத்தனர். மெட்ராஸும் தற்காலிக பெயர் என்று யூனிட் தெரிவிக்கிறது.
 
வடசென்னையை மையமாகக் கொண்ட மெட்ராஸ் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து குட்டிப்புலி முத்தையா இயக்கத்தில் கொம்பன் என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். வரும் 18 -ம் தேதி கொம்பனின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
 
சகுனி, அழகுராஜா, அலெக்ஸ்பாண்டியன் தற்போது மெட்ராஸ் என்று கார்த்தியின் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வரும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் கொம்பனையும் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil