Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவியத்தலைவி பிந்து மாதவி

Webdunia
புதன், 14 மே 2014 (11:15 IST)
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பிந்து மாதவியின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்துள்ளது. பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அவர் புதிதாக விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இடம் பொருள் ஏவல், வன்மம், மெல்லிசை படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் இன்னொரு புராஜெக்ட் காவியதலைவன். 

ஸ்டுடியோ 9 யுடன் இணைந்து பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
 
தற்போது வன்மம் படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடந்து வருகிறது. அறுபது நாள் ஷெட்யூல்ட். இந்தப் படப்பிடிப்பில்தான் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.
 

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

Show comments