Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்கு

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (12:11 IST)
கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்துக்கு நிரந்தர தடைகோரி தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருப்பர் நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறவர் எம்.பாலசுப்பிரமணியம். இந்தப் படத்தில் அகில், அருந்ததி நடிக்க நடராஜன் கோபி படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு கால்பந்தாட்டத்தில் மிக விருப்பம். உலக அளவில் கால்பந்தாட்ட வீரனாக புகழ்பெற வேண்டும் என்பதே அவனது லட்சியம். இந்நிலையில் ஒரு கொலை வழக்கு அவனை ரவுடியாக மாற்றிவிடுகிறது.
 
நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் கருப்பர் நகரம் பாலசுப்பிரமணியம், இந்த மாதம் 26 -ஆம் தேதி வெளியாக இருக்கும் மெட்ராஸ் படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்களில் கருப்பர் நகரம் படத்தின் காட்சிகள் அப்படியே இருப்பதாகவும், கதையும் ஒன்றுபோல் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவரை 3 கோடிக்கு மேல் கருப்பர் நகரம் படத்துக்கு செவளித்து உள்ளதாகவும், மெட்ராஸ் படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும் மனுவில் மேலும் கூறியுள்ளார்.
 
மெட்ராஸ் படத்தை அட்டகத்தி ரஞ்சித் இயக்கி உள்ளார். கருப்பர் நகரம் படத்தை ரஞ்சித் காப்பியடித்தார் என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை. பல மாதங்கள் முன்பே ரிலீஸுக்கு தயாராகிவிட்ட படம், பாதி மட்டுமே முடிந்துள்ள ஒரு படத்தின் காப்பி என்று எப்படி சொல்ல முடியும்? 
 
மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை 22 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன் பதில் மனு அளிக்க மெட்ராஸ் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments