Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் அவன் அவள்

Webdunia
வியாழன், 24 ஜூலை 2014 (17:30 IST)
ஆலமரத்தடியில் வேறு எந்த செடி கொடியும் வளராது என்பார்கள். இசையைப் பொறுத்தவரை இளையராஜா மிகப்பெரிய ஆலமரம். அவரது அடிச்சுவட்டில் இருப்பதாலோ என்னவோ திறமை இருந்தும் கார்த்திக் ராஜாவால் சோபிக்க முடியவில்லை. அவரது தனி இசையமைப்பில் படங்கள் வருவது அபூர்வம். தற்போது அவன் அவள் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
ராம்கிரீஸ் மிரினாளி என்பவர் எழுதி இயக்கியிருக்கும் படம் அவன் அவள். இதுவொரு திகில் படம்.
 
குற்றம் செய்த ஒருவன் போலீஸிடமிருந்து தப்பிக்க அடர்ந்த காட்டுக்குள் அடைக்கலமாகிறான். காட்டில் ஒரு பங்களாவை கண்டடைகிறான். அதில் வசிக்கும் பெண்ணுடன் அவனுக்கு பழக்கமாகிறது. பழக்கம் காதலாகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சாந்தி முகூர்த்தமும் நடக்கிறது. அதன் பிறகு அவள் காணாமல் போகிறாள். அவன் எவ்வளவு தேடியும் அவள் எங்கு போனாள் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.
 
அவள் யார்? 
 
இந்த கேள்வி எதிர்பாராத திகில் பதில்களை அளிக்கிறது. அது என்ன என்பதுதான் மீதி கதை.
 
விக்னேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவிகா மாதவன், சந்திரிகா என்று இரு ஹீரோயின்கள். கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் இயக்குனர்.
 
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments