Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமெடி த்ரில்லர் ’8எம்.எம்’

காமெடி த்ரில்லர் ’8எம்.எம்’
, திங்கள், 12 மே 2014 (15:02 IST)
’சென்னையிலிருந்து இன்பச் சுற்றுலாவுக்காக ஒரு இளம் ஜோடி கொடைகானலுக்கு காரில் செல்கிறார்கள். அப்படி சென்றவர்களுக்கு என்ன நடக்கிறது..? போகும் வழியில் ஏற்படும் திகிலான அனுபவங்கள்.என்ன..? கொடைக்கானலில் உண்டான சிக்கல்கள் என்ன..? என்பதுதான் ‘8எம்.எம்’ படத்தின் கதை. 
 
படம் முழுக்க ஒருவித ’த்ரில்’ லான காட்சிகள்தான். கூடவே நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது.’ என்கிறார் படத்தின் இயக்குனர் அமின். இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர்.
 
 ‘ படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும், கேட்கிற போதே ஏதோ இருக்கிறது என்று என்ண வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த டைட்டிலை வைத்தேன்’. என்கிறார். இந்தப் படத்தில் மலேசிய தமிழ் நடிகர்களான சிவபாலன், திவ்யா, ரோஷன், நிர்மல் ஆகியோர் நடிக்கின்றனர். மலேசியாவை சேர்ந்த ஜெய ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil