Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமெடியில் கலக்க வரும் மெஸ்

காமெடியில் கலக்க வரும் மெஸ்
, சனி, 10 மே 2014 (17:34 IST)
ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமிடம் வானம் வசப்படும் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும், சில விளம்பர படங்களில் வேலை பார்த்த அனுபவத்தையும் வைத்தே நேரடியாக இயக்குனராகி இருக்கிறார் ஆந்திரா மெஸ் படத்தின் இயக்குனர் ஜெய். 
ஆந்திரா மெஸ் என்று படத்துக்கு பெயர் வைத்திருந்தாலும், முழுக்க ஒரு திருட்டு சம்பந்தமான நான்கு நண்பர்கள் பற்றிய கதையாம் இது. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு புதிய சினிமா தளத்தை இதன் மூலம் சொல்லி இருக்கிறேன். நகைச்சுவையிலும் வித்தியாசம் இருக்கும் அதே நேரத்தில், ஆழமான கதையை உள்ளோட்டமாக கொண்டிருக்கும் ஆந்திரா மெஸ். 
 
அனைத்து வேலைகளும் முடிந்து தயார் நிலையில் இருக்கிறது. கூடிய விரைவில் பட்த்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். கண்டிப்பாக இது வியாபார ரீதியில் வெற்றி பெறுவதோடு, தரமான படமாகவும் இருக்கும் என்று உறுதியோடு கூறுகிறார் ஜெய்.

Share this Story:

Follow Webdunia tamil