Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் காரணமாக படவாய்ப்பை இழந்த அமலா பால்

காதல் காரணமாக படவாய்ப்பை இழந்த அமலா பால்
, புதன், 30 ஏப்ரல் 2014 (18:24 IST)
திருமணம் என்ற வார்த்தையை நடிகைகள் உச்சரித்தாலே தமிழ், தெலுங்கில் அவர்கள் சீட்டு கிழிக்கப்படும். இயக்குனர் விஜய்யை காதலிக்கும், அவரை விரைவில் திருமணம் செய்யப் போகும் அமலா பாலுக்கும் அப்படியொரு நிலை தெலுங்கில் ஏற்பட்டிருக்கிறது.
 
சென்ற மார்ச்சில் வஸ்தா நீ வேனுகா என்ற படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தை இயக்கும் ரமேஷ் வர்மாவும், தயாரிக்கும் தாசரி கிரண் குமாரும் அந்தக் கதைக்கு அமலா பால்தான் சரியாக இருப்பார், அவரைவிட்டால் வேறு ஆளில்லை என்றெல்லாம் கூறினர். எல்லாம் அமலா பாலின் காதல் விவகாரம் தெரியும்வரை.
 
அமலா பால் திடீரென திருமணம் செய்து கொண்டால் படம் பாதியில் நிற்குமோ என்ற சந்தேகத்தைவிட, இன்னொருவரை காதலிக்கும் நாயகியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தில் படத்திலிருந்தே அமலா பாலை நீக்கியுள்ளனர். அவருக்குப் பதில் யாரையும் காதலிக்காத நடிகையாக தேடி வருகிறார்கள்.
 
அதேநேரம் அமலா பாலின் காதல் விவகாரம் வெளியான பிறகு மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil