Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி தேடும் ஹீரோ

Webdunia
வியாழன், 22 மே 2014 (12:07 IST)
தலித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று உறுதியோடு, காதலியை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகன். 
 
அப்படி ஒரு பெண் மீது காதல் வயப்பட்டு, காதலை சொல்லலாம் என்று காத்திருக்கும் சமயத்தில் அந்தப் பெண் இன்னொருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 
 
இப்படி பல பெண்களிடம் ஹீரோ ஏமாந்து போனாலும், மனம் தளராமல் மீண்டும் மீண்டும் காதலிகளை தேடுவது போன்ற வித்தியாசமான காமெடி படம்தான் ’சோக்கு சுந்தரம்’ . 
 
கதாநாயகனாக எம்.ஆர் நடிக்க, இவருக்கு ஜோடியாக சொளஜன்யா நடிக்கிறார். இவர் தமிழுக்கு புதியவர் என்றாலும், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 
 
மேலும், இதில் வடிவுக்கரசி, ’கராத்தே’ ராஜா, ’போண்டா’ மணி, பெஞ்சமின், சாப்ளின் பாலு போன்றவர்களும் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ’ஆனைவாரி’ ஸ்ரீதர். இவர் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார்.
 
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments