Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்சிகளை நீக்க மறுத்ததால் சிகப்பு மனிதனுக்கு யுஏ சான்றிதழ்

காட்சிகளை நீக்க மறுத்ததால் சிகப்பு மனிதனுக்கு யுஏ சான்றிதழ்
, வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (13:55 IST)
விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்கு மறு தணிக்கைக்குழுவும் யுஏ சான்றிதழே வழங்கியுள்ளது.
Vishal, Lakshmi Menon Liplock
திரு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஷால், லட்சுமிமேனனின் முத்தக் காட்சி இரு இடங்களில் வருகிறது. இந்தக் காட்சியை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் என்றது சென்சார். கதைக்கு அந்தக் காட்சிகள் தேவை என்பதால் மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பினர். யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவீத வரிவிலக்குக்கு படம் தகுதி பெறும்.
 
மறு தணிக்கையில் படத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் என தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் காட்சிகள் கதைக்கு மிக முக்கியமானவை. அவைகளை நீக்கினால் திரைக்கதையின் கோர்வை பாதிக்கப்படும். அது பற்றி எடுத்துச் சொல்லியும் சென்சார் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
இறுதியில் 30 சதவீத வரிச்சலுகையை தியாகம் செய்து காட்சிகளை நீக்காமல் நான் சிகப்பு மனிதன் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 
 
வரும் 11 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil