Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலகலப்பு 2 - சுறுசுறு சுந்தர் சி

கலகலப்பு 2 - சுறுசுறு சுந்தர் சி
, புதன், 14 மே 2014 (13:28 IST)
மூன்று மாதத்தில் ஒரு படம். இதுதான் சுந்தர் சி-யின் கணக்கு. நோகாமல் நுங்கு மட்டுமில்லை படமும் எடுக்கலாம் என்பதை கற்றுக் கொள்ள இவர் ஒரு யூனிவர்சிட்டி. கலகலப்பு படத்தில் அஞ்சலியும், விமலும் ஓடிப்போக திட்டமிடும் இரவுக் காட்சிகளைகூட சோம்பல்பட்டு நட்ட பகலில் படமாக்கியவர் சுந்தர் சி. என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலகலப்பு வெற்றி பெற்ற அன்றே இரண்டாம் பாகம் எடுப்பது என்று முடிவு செய்தனர். குஷ்புவும், யுடிவியும் இணைந்து தயாரிப்பதாகதான் ஏற்பாடு. நடுவில் மத கஜ ராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை என்று பிஸியானதால் இரண்டாம் பாகம் கொஞ்சம் லேட். தற்போது அரண்மனை படவேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
 
இந்த இரண்டாம் பாகத்தில் விமல், சிவாவுடன் சித்தார்த், ஹன்சிகா ஜோடியையும் இணைக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி. இந்த ஜோடிதான் அவரின் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்தது.
 
செய்தி உண்மையென்றால் கலகலப்பு இரண்டு மடங்காகும்.

Share this Story:

Follow Webdunia tamil