Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலை டார்ச்சர் செய்யப் போகும் ஆஷா சரத்

கமலை டார்ச்சர் செய்யப் போகும் ஆஷா சரத்
, செவ்வாய், 22 ஜூலை 2014 (13:56 IST)
மலையாள நடிகை ஆஷா சரத் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் சீதா ஐபிஎஸ் ஆக நடிக்க உள்ளார்.
 
மலையள த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மனைவி மற்றும் மகளால் கொலை செய்யப்படும் இளைஞனின் தாயாக ஆஷா சரத் நடித்திருந்தார். கதைப்படி அவர் ஒரு ஐபிஎஸ் ஆபிசர். அவரது கணவராக நடித்தவர் சித்திக்.
 
மகன் காணாமல் போனதற்கு காரணம் மோகன்லாலும் அவரது குடும்பமும்தான் என்பதை தனது புத்திசாலித்தனத்தால் உணர்ந்து கொள்ளும் ஆஷா சரத் அவர்களை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்கப் பார்ப்பார். படத்தில் அவருடையது முக்கியமான கதாபாத்திரம்.
 
கன்னடத்தில் பி.வாசு த்ரிஷ்யத்தை ரீமேக் செய்த போது ஆஷா சரத்தை மலையாளத்தில் அவர் நடித்த அதே வேடத்தில் நடிக்க வைத்தார். கன்னடத்தில் அவரது கணவராக நடித்தவர் பிரபு. கன்னடப் படத்தில் ஆஷா சரத்தின் பெயர் ரூபா ஐபிஎஸ்.
 
இப்போது தமிழ் ரீமேக்கில் சீதா ஐபிஎஸ் ஆக நடிக்கிறார். அவரது நடிப்புதான் தொடர்ந்து இரு ரீமேக்குகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. தமிழ் ரீமேக்கில் கமலுக்கும் அவரது குடும்பத்துக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கப் போகிறவர் ஆஷா சரத்தான். 

Share this Story:

Follow Webdunia tamil