Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாசர்

கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாசர்
, திங்கள், 26 மே 2014 (18:41 IST)
கமல்ஹாசனின் படத்தில் உரிய வேடம் இருந்தால் அதில் கண்டிப்பாக நாசர் நடித்திருப்பார். உத்தம வில்லனில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கமலுக்கு அவர்தான் வில்லன் என்கின்றன செய்திகள்.
இந்த வில்லனின் டெடிகேஷன் பார்த்து ஒருகணம் ஆடிப்போய்விட்டார் கமல்.
 
அப்படி என்ன நடந்தது?
 
நாசரின் மகன் ஃபைசல் கார் விபத்தில் படுகாயமடைந்தது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அந்த நேரத்திலும் கடமை முக்கியம் என உத்தம வில்லனுக்கு தான் கொடுத்த கால்ஷீட் வீணாகிவிடக் கூடாது என்று படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் நாசர். மகன் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போதே கடமை முக்கியம் என படப்பிடிப்புக்கு வந்த நாசரின் டெடிகேஷனைப் பார்த்து கமல் உள்ளிட்ட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி.
 
ஒரு நடிகர் நீண்ட காலம் திரையில் பிளிச்சிட திறமை மட்டுமின்றி இதுபோன்ற அர்ப்பணிப்பும் தேவை. வளர்ந்து வரும் நடிகர்கள் நாசரிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.
 

Share this Story:

Follow Webdunia tamil