Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் காக்கி சட்டைக்கு மாறும் டாணாக்காரன்...?

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2014 (17:41 IST)
சிவ கார்த்திகேயன் தனுஷின் தயாரிப்பில் நடித்துவரும் படத்துக்கு டாணா என்று பெயர் வைத்திருந்தனர். அதனை காக்கி சட்டை என்று மாற்றலாமா என்று யோசித்து வருகின்றனர்.
 
தனுஷின் வுண்டர்பார் தயாரித்த முதல் படம் எதிர்நீச்சல். துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது. அப்போதே மீண்டும் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்க ஒரு படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து அட்வான்ஸும் தந்தார் தனுஷ். படத்துக்கு டாணா என்று பெயரும் வைத்தனர்.
டாணா என்றால் போலீஸ் என்று பொருள். டாணாக்காரர் என்றால் போலீஸ்காரர். டாணா என்ற பெயர் பலருக்கும் அறிமுகமில்லாததால் அனைவருக்கும் தெரிந்த கேச்சிங்கான பெயர் வைத்தால் என்ன என்று டாணா யூனிட்டுக்கு யோசனை. 1985-ல் கமல் நடிப்பில் வெளிவந்த காக்கிசட்டை பொருத்தமாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர். காக்கிசட்டை பெயரை பயன்படுத்துவது என்றால் அப்படத்தை தயாரித்தவரிடம் அல்லது அவரது வாரிசுகளிடம் நோ அப்ஜெக்ஷன் கடிதம் வாங்க வேண்டும்.
 
அந்த தலைவலிக்கு டாணாவே இருக்கட்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்க. இன்றுவரை டாணா என்ற பெயர் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.
 
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவ கார்த்திகேயனுடன் நடித்த ஸ்ரீதிவ்யா ஹீரோயின். சிவ கார்த்திகேயனின் அடுத்த வெளியீடு இந்தப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments