Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோ‌டியாகும் அஞ்சலி

கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோ‌டியாகும் அஞ்சலி
, செவ்வாய், 6 மே 2014 (15:13 IST)
கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமலிருந்த அஞ்சலி கன்னட படமொன்றில் நடிக்க உள்ளார். புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோ‌டியாக நடிப்பது அஞ்சலி.
தன்னைத்தானே அஞ்சலி கிட்னாப் செய்தது முதல் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர். அந்த தயக்கத்துக்கு வலு சேர்ப்பது போல் அஞ்சலி எங்கிருக்கிறார் என்பதே பலநேரம் யாருக்கும் தெரியவில்லை. அமெரிக்காவில் காதலனை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார் என்றும் தகவல்கள் வந்தன. 
 
இந்நிலையில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் ராணாவிக்ரமா படத்தில் அவருக்கு ஜோ‌டியாக நடிக்க அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அஞ்சலியின் திறமையைப் பார்த்தே அவரை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்ததாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
 
இதன் பிறகாவது அஞ்சலி தனது திறமையை வீணடிக்க மாட்டார் என நம்புவோம்.
 

Share this Story:

Follow Webdunia tamil