Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னடத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா

கன்னடத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா
, செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (15:53 IST)
தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கன்னட சினிமாவில் சத்தமில்லாமல் என்ட்ரியாகிறார் அனுஷ்கா.
தெலுங்கில் ருத்ரம்மாதேவி, பாகுபலி என இரு சரித்திரப் படங்கள். இரண்டுமே தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட தயாரிப்புகள். இரண்டிலும் அனுஷ்கா ஹீரோயின். அப்படியே தமிழுக்கு வந்தால் அஜீத், ரஜினி படங்களில் நாயகி. நிற்க நேரமில்லாமல் இந்த நான்கு படங்களில் அவர் நடித்தாக வேண்டும்.
 
இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கயிருக்கும் ஜக்குதாதா என்ற கன்னடப் படத்தில் நடிகர் தர்ஷனுடன் நடிக்க அனுஷ்கா கால்ஷீட் தந்துள்ளார். இதுதான் அனுஷ்காவுக்கு கன்னடத்தில் முதல் படம்.
 
ஜக்குதாதாவை ராகவேந்திர ஹெக்டே இயக்க உள்ளார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil