திமுக ஆட்சியில் தமிழில் பெயர் இருந்தாலே வரி விலக்கு கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் இரண்டு மாறுதல்கள் செய்யப்பட்டன. யு சான்றிதழ் பெற்ற படமாக இருக்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
இதில் இரண்டாவதான தமிழ் கலாச்சாரம் எது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. கமல் விருமாண்டி பிரச்சனையின் போது சொன்னது போல், ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை மாறக் கூடியது நமது கலாச்சாரம். இதில் எதை கலாச்சாரம் என்றும் இல்லை என்றும் தீர்மானிப்பது?
இந்த உட்டாலக்கடி விதிமுறையை வைத்து ரெட் ஜெயண்ட் தய ாh pக்கும் படங்களில் ஏகமாக விளையாடியது வ ா pவிலக்கு அளிக்கும் குழு. யு சான்றிதழ் பெற்றும் ரெட் ஜெயண்டின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை படங்களுக்கு வ ா pச்சலுகை மறுக்கப்பட்டது. அப்போதே கோர்ட் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் இந்தமுறை கோர்ட்டுக்கு போயேவிட்டார். ரெட் ஜெயண்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில்,