Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதிர்வேலனுக்கு கமிஷன் வேண்டும் - கோர்ட்டுக்கு போன உதயநிதி

கதிர்வேலனுக்கு கமிஷன் வேண்டும் - கோர்ட்டுக்கு போன உதயநிதி
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (09:50 IST)
இது கதிர்வேலனின் காதல் படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ரெட் ஜெயண்ட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
FILE

திமுக ஆட்சியில் தமிழில் பெயர் இருந்தாலே வரி விலக்கு கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதில் இரண்டு மாறுதல்கள் செய்யப்பட்டன. யு சான்றிதழ் பெற்ற படமாக இருக்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இதில் இரண்டாவதான தமிழ் கலாச்சாரம் எது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. கமல் விருமாண்டி பிரச்சனையின் போது சொன்னது போல், ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை மாறக் கூடியது நமது கலாச்சாரம். இதில் எதை கலாச்சாரம் என்றும் இல்லை என்றும் தீர்மானிப்பது?
webdunia
FILE

இந்த உட்டாலக்கடி விதிமுறையை வைத்து ரெட் ஜெயண்ட் தயாhpக்கும் படங்களில் ஏகமாக விளையாடியது வpவிலக்கு அளிக்கும் குழு. யு சான்றிதழ் பெற்றும் ரெட் ஜெயண்டின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை படங்களுக்கு வpச்சலுகை மறுக்கப்பட்டது. அப்போதே கோர்ட் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் இந்தமுறை கோர்ட்டுக்கு போயேவிட்டார். ரெட் ஜெயண்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில்,

இது கதிர்வேலனின் காதல் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து அவர்கள் படத்தைப் பார்த்து வரி விலக்குக்கு படம் தகுதியானதா இல்லையா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil