Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே வாரத்தில் கலைந்த கர்ப்ப வதந்தி

ஒரே வாரத்தில் கலைந்த கர்ப்ப வதந்தி
, புதன், 17 செப்டம்பர் 2014 (16:06 IST)
நடிகை சினேகா கர்ப்பம் என்று சில ஊடகங்கள் (நாமல்ல) செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அது பொய் செய்தி என்று விளக்கமளித்துள்ளார் சினேகா.
நடிகைகள் திருமணமானதும் கர்ப்ப வதந்திகள் உலவவிடப்படுவது சகஜம்தான். அதேமாதிரி நடிகை சினேகாவும் கர்ப்பமாக இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
 
நடிகை ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதை அவரது கணவரும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் மீடியாவிடம் தெரிவித்தார். அந்த செய்தியை வெளியிட்டவர்கள் கொசுறாக, சினேகாவும் கர்ப்பம் என்று எழுதினர்.
 
அதனை சினேகா மறுத்துள்ளார். ஊடகங்களில் நான் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தி தவறு. நானும், பிரசன்னாவும் இன்னும் பெற்றோராகும் முடிவை எடுக்கவில்லை என அவர் விளக்கமளித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil